விருதுநகர், பிப்.14: விருதுநகர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருவரை கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி தெற்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஒரு வீட்டில் திருமங்கலம் அருகே உள்ள அரசம்பட்டியை சேர்ந்த கனகபாண்டி(29), என்பவர் 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கனகு பாண்டியை கைது செய்து, 1,800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
The post 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.