விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல் - அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை

1 day ago 4

திருவனந்தபுரம்,

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் கடந்த 5 நாட்களாக பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து வந்தது.

பாகிஸ்தான் எல்லை மாநிலங்களில் உள்ள வெளி மாநிலத்தவர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மேலும் போரின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாட்டிலும் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.

ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகம் அருகே கடந்த 7 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று என்ஜின் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

போர் பதற்றம் காரணமாக இந்த கப்பலை உடனடியாக இந்திய கடல் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்ல விழிஞ்ஞம் கடலோர காவல் படையினர் கப்பல் மாலுமிக்கு உத்தரவிட்டு உள்ளனர். கப்பல் என்ஜின் 'கம்ப்ரசரில்' ஏற்பட்டுள்ள பழுது நீக்கப்பட்டு கப்பலை அந்த இடத்தில் இருந்து உடனடியாக மாற்றப்படும் என்று அந்த கப்பலில் மாலுமியாக உள்ள அன்வர் காமல் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் கப்பலை ஆய்வு செய்த கடலோர காவல் படையினர், உடனடியாக, இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறு உத்தரவிட்டு உள்ளனர். கப்பலில் 10 இந்தியர்கள் உள்பட 26 பணியாளர்கள் கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article