விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

6 months ago 23

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்து வரும் வீரர் - வீராங்கனையரின் அடுத்தகட்ட வெற்றிக்குத் துணை நிற்க தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

அந்த வகையில், நம்முடைய சைக்கிள் பந்தய வீரர்கள் சஞ்சய் சரவணன், கிஷோர் மற்றும் வீராங்கனையர் தங்கைகள் ஸ்மிருதி, கஸ்தூரி, ஹாசினி ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.83.33 லட்சம் மதிப்பில் அதிநவீன மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் இன்று வழங்கப்ட்டது . சைக்கிள் பந்தயத்தில் எண்ணற்ற சாதனைகளைப் படைக்க அவர்களை வாழ்த்தினோம். என தெரிவித்துள்ளார்.  

Read Entire Article