நாமக்கல், ஜூன் 24: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பச்சுடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
சேந்தமங்கலம் தாலுகா, பச்சுடையாம்பட்டி காலனி காளியம்மன் கோயில் அருகில், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த நிலம் 2003ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை மூலம், விளையாட்டு மைதானம் மற்றும் கோயில் பணிகளுக்காக வழங்கப்பட்டது.
தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் நேரில் பார்வையிட்டு, எங்கள் கிராம மக்களுக்கு நிலம் சொந்தம் என கூறி சென்றார். ஆனால், அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பல பேருக்கு விற்பனை செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
The post விளையாட்டு மைதானத்துக்கு வாங்கிய நிலம் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.