மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பத்லாப்பூர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு கட்டுமான தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 16-ந்தேதி மாலை 6 மணி அளவில் தொழிலாளியின் மகள் அக்சிதா(வயது4) என்ற சிறுமி கட்டிடத்தின் 5-வது மாடியில் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது நிலைதடுமாறிய சிறுமி 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை சக தொழிலாளர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுமி அக்சிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.