விளாத்திகுளம் வட்டாரத்தில் ரேஷன் கடைகளில் பறக்கும்படை ஆய்வு

4 weeks ago 3

விளாத்திகுளம், டிச. 18: விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில் இணை பதிவாளர் பறக்கும் படையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தலைமையில் துணை பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்), 9 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 5 முதுநிலை ஆய்வாளர்கள், 2 இளநிலை ஆய்வாளர்கள் உள்பட 17 கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும்படை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள 72 கூட்டுறவு துறை ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் ரேஷன் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ₹8100 அபராதமாக விதிக்கப்பட்டது. இதேபோல் கூடுதலாக கண்டறியப்பட்ட பொருட்களுக்காக ₹2525 அபராதம் என மொத்தம் ₹10625 அபராதம் விதிக்கப்பட்டது.

The post விளாத்திகுளம் வட்டாரத்தில் ரேஷன் கடைகளில் பறக்கும்படை ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article