
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சி அருகே இடையாறில் விலங்கு கொழுப்பை பதப்படுத்தி, அதுசார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு களமச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்.
முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு கேஸ் அடுப்பின் பாதுகாப்பு வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.