
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட போலீசார் செங்கிப்பட்டி பகுதியில் பூதலூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செங்கிப்பட்டி அருகே கூனம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் காளிதாஸ் (வயது29) தன் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காளிதாஸ் வீட்டில் இருந்து சுமார் 150 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளிதாஸை தேடி வருகின்றனர்.