விரைவில் வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடர்

3 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார்' என்ற திரைபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் அடுத்தாக லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'ஓம் காளி ஜெய் காளி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தற்போது இத்தொடரின் டீசர் வெளியானது. அதில் நடிகர் விமல் கடவுள் வேஷம் கட்டி ஆடுவது போன்ற காட்சிகளில் மிரட்டியுள்ளார். இதனால் இந்த தொடரின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read Entire Article