தாமதமாக வெளியான 'சப்தம்' திரைப்படம் - நடிகர் ஆதி வருத்தம்

1 day ago 1

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் உருவான படம் 'சப்தம்'. இந்த படத்தில் ஆதி, 'ரூபன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 28-ந்தேதி(நேற்று) திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தர தாமதம் ஏற்பட்டதால் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் திரைப்படம் திட்டமிட்டமிபடி நேற்று வெளியாகாமல், இன்று(மார்ச் 1-ந்தேதி) காலை முதல் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்திற்கு நடிகர் ஆதி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மார்ச் 1-ந்தேதி 'சப்தம்' திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று திரைப்படம் வெளியாகாமல் போனது மிகப்பெரிய இழப்புதான். நிறைய இடங்களில் ரசிகர்கள் முன்பதிவு செய்து படம் பார்க்க முடியாமல் திரும்பி சென்றுள்ளனர். அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

எனது திரைப்பயணத்தில் இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது. திரைப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. இன்று படம் வெளியாகிவிட்டது. நாங்கள் படத்திற்காக புரமோஷன் எதுவும் செய்யவில்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். அதுதான் இந்த படத்திற்கான புரமோஷன்."

இவ்வாறு ஆதி தெரிவித்தார். 

Read Entire Article