
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிட்சிபாஸ் சிறப்பாக விளையாடினார் இதனால் 6-3,6-3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.