
சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தற்போது இவர் 'ஹரி ஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார்.
நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை பவன் கல்யாண் நிறைவு செய்துள்ளார். இதனை படக்குழு புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளது. பிரமாண்டமான டிரெய்லரும் பிளாக்பஸ்டர் பாடல்களும் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், 30-ம் தேதிக்கு தள்ளிபோயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படம் கடந்த மாதம் 28-ம் தேதியில் இருந்து வருகிற 9-ம் தேதிக்கு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.