ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்

15 hours ago 5

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கிங்ஸ்டன்' படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து 'இடிமுழக்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது, அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிகை காயடு லோஹர் நடப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று நாளை மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Every door hides a deeper story ✨Here it's the Production No 2 announcement from the @AKfilmfactory Starring : @gvprakash & @11LoharProduced by : @arun_kumarofflDirected by : @DirMari_ChinnaFirst Look releasing on MAY 9TH @SamCSmusic pic.twitter.com/akG9egpOpL

— Mariyappan Chinna (@DirMari_Chinna) May 7, 2025
Read Entire Article