விருதுநகரில் ரூ.101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

2 months ago 10
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 350 கோடி ரூபாய் செலவில் 400 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  கள ஆய்வு மேற்கொள்ள விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் 101 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், காரியாப்பட்டி வட்டத்தில் தெற்காற்றின் குறுக்கே 21 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்படும் என்றும், கவுசிகா ஆறு, கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் 41 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்றும் அறிவித்தார். கலைஞரின் பெயரில் தொடங்கப்படும் திட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் பதில் அளித்தார்.
Read Entire Article