அண்ணாநகர், மே 15: நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (40). இவர் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நடைபாதையில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் கடை போடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாக்கியலட்சுமியை 5 பெண்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். புகாரின்படி, கோயம்பேடு போலீசார் நெற்குன்றம் சேமாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீதா (34), வனிதா (40), எல்லம்மாள் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்ய வந்த 3 பேரில் நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த திலகவதி (40), சசிகலா (37) ஆகியோரை கைது செய்தனர். பிறகு அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பூக்கடை சூறை; 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.