விராலிமலை குறிச்சிப்பட்டி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா

4 hours ago 2

விராலிமலை: விராலிமலை அடுத்த குறிச்சிப்பட்டி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த குறிச்சிபட்டி பெரியகுளத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று காலை நடந்தது. குறிச்சிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே திரண்டனர். காலை 6 மணிக்கு மீன்பிடி திருவிழா துவங்கியது. பொதுமக்கள் வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி ஆர்வத்துடன் மீன் பிடித்தனர்.

இதில் பெரும்பாலானோருக்கு அதிகளவில் மீன்கள் சிக்கியது. 1 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட கட்லா, விரால், ரோகு, கெண்டை, குறவை உள்ளிட்ட மீன்கள் சிக்கியது. குளவாய்ப்பட்டி கருங்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்களுக்கு அதிகளவில் மீன்கள் சிக்கவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பெரியகுளத்தில் இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

The post விராலிமலை குறிச்சிப்பட்டி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Read Entire Article