
ஐதராபாத்,
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி புது சாதனை படைத்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை , ஆர்சிபி தோற்கடித்தது. இதனையடுத்து, சமூக ஊடகங்களில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் விராட் கோலிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், '96' பட நடிகை வர்ஷா போலம்மா, விராட் கோலிக்கு எதிரான டிரோல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
"ஒரு வீரரை புகழ்வதற்காக இன்னொருவரை நாம் அவமதிக்கக்கூடாது. நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை நாம் அவமதிக்கக்கூடாது. அவர்கள் மென் இன் புளூ என்பதை மறந்துவிடாதீர்கள்,"
இந்த பதிவு ஆர்.சி.பி ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. வர்ஷா கடைசியாக சந்தீப் கிஷனின் 'ஊரு பேரு பைரவகோனாவில் நடித்திருந்தார்.