
சென்னை,
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் வைஷ்ணவி சைதன்யா. இவர் கடந்த 2023- ம் ஆண்டு வெளியான 'பேபி' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து, அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இவர் நடிப்பில் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியான படம் 'ஜாக்'. சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை பொம்மரில்லு பாஸ்கர் இயக்கி இருந்தார்.
இருப்பினும் திரையரங்குகளில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 8-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. திரையரங்கில் சோபிக்க தவறிய 'ஜாக்' ஓடிடியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.