
சென்னை,
விராட் கோலியை முதல் முறை சந்தித்தது பற்றியும், அப்போது கிடைத்த அனுபவத்தை பற்றியும் கலகலப்பாக பேசி இருக்கிறார் நடிகர் சிம்பு.
'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது இது பற்றி சிம்பு பேசினார். அவர் கூறுகையில், 'சச்சின் ஓய்வை அறிவித்தபோது அவருக்கு பிறகு கோலிதான் என்று நான் சொன்னேன். அப்போது நண்பர்கள் எல்லோரும் கலாய்த்தார்கள். ஆனால் அதுதான் நடந்துள்ளது.
முதல் முறை கோலியை சந்தித்தபோது , கோலி நீங்கள் யார் என்று கேட்டார். நான் சிம்பு என்று சொன்னேன். அதற்கு கோலி, உங்களை எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டு சென்றார். அப்போது, ஒருநாள் நான் யார்? என்று அவருக்கு தெரிய வைப்பேன் என்று சபதம் ஏற்றேன்' என்றார்.
தொடர்ந்து, சமீபத்தில் 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் என்று கோலி சொன்னதை சுட்டிகாட்டிய சிம்பு, இருந்தாலும் பாடல்தான் பிடிக்கும் என்று கோலி சொல்லி இருக்கிறார், அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது என்றும் கூறினார்.