விராட் கோலியின் நகைச்சுவை செயலால் அடக்க முடியாமல் சிரித்த அனுஷ்கா சர்மா

2 months ago 12

புனே,

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களிலான போட்டி தொடரின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. ஒரு நாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த ஒரே வீரர் என வரலாறு படைத்த பெருமைக்குரியவர்.

2017-ம் ஆண்டு நடிகை அனுஷ்கா சர்மாவை கோலி திருமணம் செய்து கொண்டார். ரசிகர்களால் கிங் கோலி என அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு இன்று 36-வது பிறந்த நாளாகும். இந்நிலையில், நடிகர் அங்கத் பேடி மற்றும் அவருடைய மனைவி நேகா தூபியா ஆகியோருடன் கோலி இன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபற்றிய வீடியோ பதிவு ஒன்றை நடிகர் அங்கத் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், விராட் கோலி செய்த ஒரு செயல் சுற்றியிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. அதிலும், அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

அந்த வீடியோவில், அங்கத்துக்கு அருகே விராட் நிற்கிறார். புகைப்படம் எடுக்க எல்லோரும் தயாரானபோது, அனுஷ்காவின் பக்கத்தில் அல்லவா நிற்க வேண்டும்? என உணர்ந்து அதுபற்றி கேட்டபடி, உடனடியாக அவர் பக்கத்தில் சென்று கோலி நின்று கொண்டார்.

இதனை பார்த்ததும் அனைவரும் சிரித்து விட்டனர். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த பதிவில் கோலிக்கு, தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை அங்கத் தெரிவித்து கொண்டார்.

Read Entire Article