வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு

4 hours ago 1

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் மறுபடியும் அயர்லாந்து செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கேட் கார்மைக்கேல், ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், டாம் மேயஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கர்த்தி, லியாம் மெக்கர்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்.

அயர்லாந்து டி20 அணி விவரம்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடெய்ர், ராஸ் அடெய்ர். கர்டிஸ் கேம்பர், கடேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, லியாம் மெக்கர்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரேக் யங். 


Ireland announce 14-member squads for the first home series against West Indies since 2019.

More details ⬇️https://t.co/V7Mq2H7Gjj

— ICC (@ICC) May 14, 2025


Read Entire Article