
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைத்தேர்வு ஜூலை 4ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியாக உள்ளது. துணைத்தேர்வுக்கு 22ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.