பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமாக 'One8 Commune' என்கிற பார் மற்றும் உணவகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், விராட் கோலியின் உணவகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தீ பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடிக்கவில்லை என்று கூறி தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, இதே உணவகம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.