விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

8 hours ago 4

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), சகநாட்டவரான மியோமிர் கெக்மனோவிக் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மியோமிர் கெக்மனோவிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Read Entire Article