விம்பிள்டன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ரைபகினா

8 hours ago 2

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), டென்மார்க்கின் கிளாரா டவுசன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கபட்ட ரைபகினா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-7 (6-8), 3-6 என்ற செட் கணக்கில் கிளாரா டவுசனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Read Entire Article