
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெர்மனியின் லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அரினா சபலென்கா 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் லாரா சீக்மண்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா உடன் மோதுகிறார்.