விம்பிள்டன் டென்னிஸ்; 3வது சுற்றுக்கு ராடுகானு தகுதி: 4வது ரேங்க் ஜாஸ்மின் வெளியேற்றம்

6 hours ago 2


லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் 5ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், 3-6, 6-3, 7-6, 4-6, 6-3 என கனடாவின் கேப்ரியல் டயல்லோவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் 22 வயது எம்மா ராடுகானு 6-3, 6-3, என செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். 4ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி, 6-4, 4-6, 4-6, என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கமிலா ரகிமோவாவிடம் வீழ்ந்தார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என செக்குடியரசின் கேடரினா சினியாகோவா வென்றார்.

The post விம்பிள்டன் டென்னிஸ்; 3வது சுற்றுக்கு ராடுகானு தகுதி: 4வது ரேங்க் ஜாஸ்மின் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article