சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய விடுதி அமைத்திட அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

6 hours ago 3

சென்னை: “7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புதிய விடுதியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தை சீரமைத்து அங்கு அனைத்து மாணவர்கள் இலவசமாக தங்கவும், அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தித் தரவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜூலை 3) என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அரசு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போரட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Read Entire Article