விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை

3 hours ago 3

ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: AGNIVEERVAYU INTAKE 01/2026.
வயது: 01.01.2005க்கும் 01.07.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கர்நாடிக்/இந்துஸ்தானி இசைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகளை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆட்சேர்ப்பின் போது இசைப் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இசைப் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்து இசைத்துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

உடற்திறன் தகுதி: 1.6 கி.மீ., தூரத்தை ஆண்கள் 7 நிமிடங்களிலும், பெண்கள் 8 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்அப் எடுத்தல், சிட்அப்ஸ் செய்தல் மற்றும் ஸ்குவாட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, இசைத் திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேரடி ஆள் சேர்ப்பு நடத்தப்படும்.

ஆட்சேர்ப்பு ஜூன் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை டெல்லி மற்றும் பெங்களூரிலுள்ள விமானப்படை தளங்களில் நடைபெறும். அன்று தேவையான அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவுக் கட்டணமாக ரூ.100 மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய விமானப் படையில் 4 ஆண்டுகள் இசைக் கலைஞர்களாக பணிபுரிய அனுமதிக்கப்படுவர். பணிக்காலத்தில் முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2ம் ஆண்டு ரூ.33 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.36,500 மற்றும் 4ம் ஆண்டு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

இசை தகுதித் திறன் தேர்வில் Concert Flute/Piccolo, key board/organ/ piono/ Oboe; Guitar (Acoustic/Lead/Bass), Clarinet in EB/Bb; Violin, Viola, String Bass/ Saxaphone in Eb/Bb; Percussion/Drums (Acoustic/Electronic), French Horn in F/Bb; All Indian Classical Instruments/ Trumpet in Eb/C/Bb/ Trombone in Bb/G/ Baritone/Euphonium/ Bass/Tuba in Eb/Bb ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 162 செ.மீ உயரம், நல்ல தெளிவான பார்வைத் திறன் மற்றும் விமானப் படை வீரர்களுக்குரிய உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05.2025.

The post விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை appeared first on Dinakaran.

Read Entire Article