திராவிட மாடல் அரசு நிகழ்த்தியுள்ள நான்காண்டு சாதனைகள் குறித்து மாபெரும் சாதனை விளக்க அணிவகுப்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

4 hours ago 3

சென்னை: திராவிட மாடல் அரசு நிகழ்த்தியுள்ள நான்காண்டு சாதனைகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் “திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனை விளக்க அணிவகுப்பை” இன்று (7.5.2025), சென்னை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இம்மாபெரும் சாதனை விளக்க அணிவகுப்பில் பாரம்பரிய நடனம் மற்றும் மேளம், பள்ளி மாணவ, மாணவியர்களின் பேண்ட் வாத்தியம், சாரண சாரணியர்களின் அணிவகுப்பு, ராஜ மேள முழக்கங்கள், வெளிநாட்டவர்கள் நம் பாரம்பரிய உடையுடன் அணிவகுப்பு, மகளிர் சுயஉதவிக் குழுவினர்களின் அணிவகுப்பு, மகளிர் உரிமைத்தொகை குழுவினர்களின் அணிவகுப்பு, பிங்க் ஆட்டோ பெண்களின் அணிவகுப்பு, நான் முதல்வன், செஸ் – ஆக்கி – முதல்வர் கோப்பை – கார் பந்தையம் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களால் பயன்பெற்ற 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு, காலை உணவு திட்டம், வடசென்னை வளர்ச்சி திட்டம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் என பல்வேறு சாதனைகளை விளக்குகின்ற வகையில் 3 வாகனங்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. இச்சாதனை விளக்க அணிவகுப்பு லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், பிரபல திரைப்பட நடிகர்கள் ‘மெட்ராஸ் அன்பு’ கலையரசன், ‘பிக்பாஸ் புகழ்’ அர்ச்சனா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப்.முரளிதரன், நாகராஜன், சுதாகர், வேலு, திரு.எம்.டி.ஆர்.நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு.சந்துரு, திரு.மகேஷ்குமார், மாநில மாணவரணி செயலாளர் ராஜுவ்காந்தி, கழக செய்தி தொடர்பாளர் ராஜா தமிழ்மாறன், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் பி.கே.பாபு, மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், பி.கே.மூர்த்தி, எழும்பூர் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் யாழினி, மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராஜன், சுதா தீனதயாளன், ராஜேஷ்வரி ஸ்ரீதர், தாவூத்பீ, சாரதா, யோகபிரியா, அமுதா, ஸ்ரீதணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திராவிட மாடல் அரசு நிகழ்த்தியுள்ள நான்காண்டு சாதனைகள் குறித்து மாபெரும் சாதனை விளக்க அணிவகுப்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article