விமர்சனத்திற்கு உள்ளாகும் 'விஸ்வம்பரா' படத்தின் டீசர்

3 months ago 23

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் இந்தப் படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. ஒரு தரப்பினர் இந்த படத்தின் டீசரை கொண்டாடி வந்தாலும், இன்னொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகிறது.

அதாவது, டீசரில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே வெவ்வேறு ஹாலிவுட் படங்களின் காட்சிகளின் தழுவலில் உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும், சில காட்சிகள் இணையத்தில் விற்பனை செய்யப்படும் காட்சிகளை வாங்கி உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். 'அவதார்' பட பாணியில் அந்த டீசரில் வரும் சின்ன குழந்தையை உருவாக்கி இருக்கிறார்கள். இவை அனைத்தையும் மேற்கோள் காட்டி டீசரை விமர்வித்து வருகின்றனர். 

 

Read Entire Article