
துபாய்,
4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்களில் தற்போது அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. அந்த வகையில் 4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகள் வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் ஆஸ்திரேலியா (100 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 2வது இடத்தில் இலங்கை (66.67 சதவீதம்) அணியும், 3வது இடத்தில் இங்கிலாந்து (50 சதவீதம்) அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும் (50 சதவீதம்) உள்ளன.
இதையடுத்து 5 இடத்தில் வங்காளதேச அணி (16.67 சதவீதம்) உள்ளது. தொடர்ந்து 6 வது இடத்தில் முறையே வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் (சதவீதம் இன்றி) உள்ளன.