விபத்துக்கான காரணம் குறித்து, லோகோ பைலட் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில்வே உயர்மட்டக்குழு விசாரணை

4 months ago 27
சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்காது என்றும், மனித தவறு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து, என்ஜின் லோகோ பைலட் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில்வே உயர்மட்டக்குழு முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளது. அதில் விபத்துக்கு நாசவேலை காரணமில்லை என்றும், மனித தவறே காரணமாக இருக்க முகாந்திரம் உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் எந்த வழித்தடத்தில் செல்ல வேண்டும் என நிலைய அதிகாரிதான் முடிவெடுப்பார் என்றும், தண்டவாளத்தில் தடம் மாற்றும் இடத்தில் பிரச்னைகள் இருந்தால், மெயின் லைனில் சென்ற ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைக்காமல் சிவப்பு விளக்கு எரிந்திருக்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article