*வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கமளிப்பு
குளித்தலை : விவசாயிகள் தங்களுடைய நில உடைமைப் பதிவுகளை சரி பார்த்து, ஒப்புதல் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வேளாண்மைத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல் வரையுள்ள அனைத்து தரவுகளையும் சேமிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் அரசின் மானிய திட்டங்கள் மற்றும் இதர பலன்களை விவசாயிகள் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் ஒரு அங்கமாக, கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் உதவி இயக்குநர் குமரன், வேளாண் அலுவலர் மகேந்திரன், துணை வேளாண் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் குளித்தலை சுற்று வட்டார பகுதிகளிலுள்ள விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எம். ஆர். பாளையத்தைச் சேர்ந்த நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களான கார்த்திகேயன், கிஷோர்குமார், ராகுல், சந்தோஷ்குமார், சரவணன், சதீஷ், சாம் ராஜ், ஷாங்கேஷ் சிரஞ்சீவி, சிவா, சுந்தர் ஆகியோர் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலதரவுகளை வேளாண் அலுவலர்களுடன் இணைந்து பதிவேற்றம் செய்ய உதவி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு அடையாள எண் பெற்று விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளை தடையின்றி பெற இப்போதே பதிவு செய்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
The post குளித்தலை வட்டார பகுதியில் விவசாயிகளுக்கு நில உடைமை பதிவேற்ற முகாம் appeared first on Dinakaran.