விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

6 months ago 19

திருப்பூர்: விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த பைனான்ஸ் அதிபர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரவடிவேல் (56). இவர் கேரளா மாநிலம் தலைச்சேரியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி அருகே வசூலுக்கு சென்றபோது வாகன விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவரது உடல் உறுப்புகளை நேற்று தானம் செய்து செய்தனர்.இதை தொடர்ந்து அவரது உடல் வருவாய்த்துறை அதிகாரிகள், உறவினர்கள் முன்னிலையின் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த குமாரவடிவேலுவுக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Read Entire Article