புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் தேமுதிக சார்பில் அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வர். கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் அறிவிப்பார். மிகப்பெரிய மாநாடு விரைவில் நடக்க உள்ளது. விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது. விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் இதுவரை நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post நடிகர் விஜய்யுடன் கூட்டணி பேச்சா..? விஜய பிரபாகரன் பதில் appeared first on Dinakaran.