பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி; டிரைவர், கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்

4 hours ago 2

சேலம்: தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை (31). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். ராஜதுரை தனது 9 மாத குழந்தை நவநீஷை, தனது தோள் மீது வைத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜதுரை கண்டக்டரிடம் பஸ்சின் முன்பக்க கதவை அடைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் கதவை அடைக்காமல் இருந்துள்ளனர்.

இந்த பஸ் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வளையக்காரனுர் மேம்பாலத்தில் இரவு 10.15 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது ராஜதுரையின் தோளில் தூங்கி கொண்டிருந்த கைக்குழந்தை நவநீஷ், தூக்கி வீசப்பட்டு படிக்கட்டு வழியே கீழே விழுந்து உயிரிழந்தது. இதுதொடர்பாக பஸ் டிரைவர் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவன்மணி (48), கண்டக்டர் பழனிசாமி(50) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், டிரைவர் சிவன்மணி, கண்டக்டர் பழனிசாமி ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி; டிரைவர், கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article