செங்கல்பட்டு: வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நேற்று அஜித்நாத் அரங்கத்தில், பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருந்தினராக, வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ்சுரானா, பள்ளி முதல்வர் வி.சி.கோவிந்தராஜன் பங்கேற்றனர். பள்ளி மாணவி எஸ்.தியா வரவேற்றார்.
பின்னர், மண்மணம் மாறாத வகையில் மாணவர்களின் பொங்கல் பற்றிய கவிதை, பேச்சு, பாடல் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர்களின் வீரத்தினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வீரக்கலைகள் மற்றும் உறியடித்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. விழாவின் நிறைவாக பள்ளி மாணவி பி.ரோஷ்னி நன்றி கூறினார்.
The post வித்யாசாகர் பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.