‘விதிகள் மீறல் மற்றும்...’ - கடலூர் விபத்துக்கு தெற்கு ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

6 hours ago 2

கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், கேட் கீப்பர் செயலைச் சுட்டிக்காட்டி விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, ‘இந்த லெவல் கிராசிங் கேட்டில் ரயில்வே நிதியுடன் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

Read Entire Article