“அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்!” - கோவை பிரச்சாரத்தில் பழனிசாமி பேச்சு

4 hours ago 2

கோவை: “எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேரத்லில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” என கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று (ஜூலை 8) இரண்டாவது நாளாக கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது: “கடந்த அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். அவர் கண்ணை திறந்து பார்த்தால்தான் தெரியும். அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது திமுக அரசு.

Read Entire Article