புதுடெல்லி: விண்வெளி துறையில் தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.1,000 கோடியில் வென்சர் மூலதன நிதியத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூலதன நிதி மூலமாக 40 ஸ்டார்ட் அப்களுக்கு நிதி ஆதரவு அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் விண்வெளித் துறையில் தனியாரின் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பின் மூலம் உலகளவில் இந்தியா தலைமைத்துவம் வலுப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ஆந்திரா, தெலங்கானா, பீகாரில் ரூ.6,798 கோடி மதிப்பில் 2 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த 2 திட்டங்கள், ரயில்வேயின் கட்டமைப்பை 313 கிமீ அளவுக்கு அதிகரிக்கும்.
The post விண்வெளி துறையில் ஸ்டார்ட்அப்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.