மதுரை: ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய 72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்துக்காக 1971-ல் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. முல்லைக்காடு, கோரம்பள்ளம் ஆகிய கிராம பகுதிகளில் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. 810 ஏக்கர் தனியாரிடம் இருந்தும் வாங்கப்பட்டன; அங்கு உரம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டு செயல்பட்டது.
மேலும் பல ஏக்கர் நிலங்களை ஸ்பிக் உர நிறுவனத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். 1981-ம் ஆண்டில் 30.40 ஏக்கர் நிலத்தை தனியார் கெமிக்கல் நிறுவனத்துக்கு ஸ்பிக் உர நிறுவனம் வழங்கியது. ஸ்பிக் நிறுவனத்தால் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 663 ஏக்கரை விவசாய பயன்பாட்டிலிருந்து விலக்களித்து 2002-ல் அரசாணை வெளியிடப்பட்டது. நிலங்களை ஆலைக்கு பயன்படுத்துவதில் விலக்கு அளிக்க மறுத்தும், அதை மீண்டும் அரசுக்கு மாற்றியும் 2007-ல் உத்தரவிடப்பட்டது.
நிலத்தை மீண்டும் அரசுக்கு மாற்றி திருநெல்வேலி நில நிர்வாக ஆணையர் 2007-ம் ஆண்டில் உத்தரவிட்டார். உத்தரவுக்கு எதிராக ஸ்பிக் உர நிறுவனம், கெமிக்கல் நிறுவனம் தனித்தனியாக வேளாண் நில தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுக்கள் 2014-ல் தள்ளுபடி; இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிலங்களை சட்ட அனுமதியின்றி மனுதாரர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்; அதை அரசு உடனே மீட்க வேண்டும் என கூறிய நீதிபதி, மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
The post ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய 72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.