விண்வெளி ஆய்வில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை

2 hours ago 1


வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது விண்வெளி ஆய்வில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸ், தற்போது நீண்ட விண்வெளி நடைக்கான சாதனையை படைத்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) வெளியே 5 மணி 26 நிமிடங்கள் நடந்து சென்றுள்ளார். இதுவரை மொத்தம் 62 மணி 6 நிமிடங்கள் வரையில் விண்வெளியில் நடந்து சென்றார்.

கடந்த 2017ம் ஆண்டில் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் 60 மணி 21 நிமிட வரை விண்வெளியில் நடந்து சென்றார். தற்போது அவரது சாதனையை சுனிதா முறியடித்தார். சுனிதாவுடன் அவரது சக வீரரான புட்ச் வில்மோரும் அவருடன் சென்றார். அவர்கள் இருவரும் விண்வெளி நிலையத்தில் செயலிழந்த ரேடியோ தகவல்தொடர்பு பிரிவை வெற்றிகரமாக அகற்றினர். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை முயன்றார்; ஆனால் அவர்கள் தோல்வியடைந்தார்.
முன்னதாக போயிங்கின் ஸ்டார்லைனரில் விண்ெவளிக்கு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி கிளம்பினர்.

அவர்கள் ஜூன் 13ம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. இருப்பினும், ஹீலியம் கசிவு மற்றும் ஸ்டார்லைனரின் த்ரஸ்டர்களின் செயலிழப்பு காரணமாக, அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இருவரையும் மீண்டும் பூமிக்கு திருப்பி அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாசாவும், எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் ஒன்று சேர்ந்து முயற்சித்து வருகின்றன.

The post விண்வெளி ஆய்வில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article