விடுமுறையை கொண்டாட வரவில்லை: விராட் கோலிக்கு கம்பீர் பதில்

8 hours ago 1

லண்டன்,

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி மோசமாக தோற்றதன் எதிரொலியாக இந்திய வீரர்களுக்கு, கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டது . இந்த விதிமுறைக்கு விராட் கோலி உள்பட சில முன்னணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் கோலி உள்ளிட்டோரின் அதிருப்திக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில்,

'குடும்பம் என்பது முக்கியமானது. ஆனால் நாம் எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒரு பெரிய காரணத்துக்காக (வெற்றி ) இங்கு வந்துள்ளோம். விடுமுறையை கொண்டாட வரவில்லை. வீரர்களின் ஓய்வறையிலோ அல்லது இந்த சுற்றுப்பயணத்திலோ நாட்டை பெருமைப்படுத்தும் வாய்ப்பு மிக குறைந்த பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். ஒவ்வொருவருக்கும் குடும்பம் முக்கியமானது. ஆனால் உங்களுடைய கவனம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை விட அதுவே உங்களுக்கான மிகப்பெரிய பணி. அந்த குறிக்கோளை ஏற்றுக்கொண்டு அதற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தை செலவிட வேண்டும். என்னை பொறுத்தவரை அந்த நோக்கமும், குறிக்கோளும் மற்றவற்றை விட முக்கியமானது' என்றார்.

Read Entire Article