மதுரை: மதுரை மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெற மே மாதம் முழுவதும் வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் 01.02.2019க்கு முன் நில உடைமையாளர்களாக இருக்கும் விவசாயிகள் மற்றும் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதோர் பயன்பெறலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர், விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற்றுக் கொண்டால் மட்டுமே தொடர்ந்து பயன்பெறலாம்.
மாவட்டத்தில் உதவித் தொகை பெறுவோரில் 13,002 விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்யாமல் உள்ளனர். 3,722 பேர் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமலும், 2,912 நபர்கள் கைரேகை பதிவு செய்யாமலும் உள்ளனர். இத்தகையை பதிவுகளை அவர்கள் அனைவரும் மேற்கொண்டால் மட்டுமே, இனிவரும் தவணை நிதி விடுவிக்கப்படும்.
இதற்காக அனைத்து கிராமங்களுக்கும் வேளாண்துறையினர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முகாம் அனைத்து வருவாய் கிராமங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் இ சேவை மையங்களில் நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு பதிவு முகாமினை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
The post விடுபட்ட விவசாயிகளை இணைக்க பிஎம் கிசான் திட்டப்பதிவு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.