சென்னை: திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் பெயரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 53,333 குடியிருப்புகள் மகளிர் பெயரில் ஒதுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வாரியத்தால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: