
ஷாஜகான்பூர்,
உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் குருகுல பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த சிறுவன் அனுராக் (வயது 13). 6-ம் வகுப்பு மாணவன். இந்நிலையில், விடுதிக்கு ராம் லக்கன் (வயது 18) என்ற 10-ம் வகுப்பு மாணவன் புதிதாக வந்திருக்கிறான்.
இந்நிலையில், இரவில் படுப்பதில் இடம் பிடிப்பதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், ராம் லக்கன் கையால் குத்தியும், உதைத்தும் உள்ளான்.
கோபத்தில் கடுமையாக தாக்கியதில், அனுராக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதில், அவனுடைய மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வந்து உள்ளது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அவனை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், கடுமையான தாக்குதலில் அந்த சிறுவன் பலத்த காயமடைந்து உள்ளான்.
இதனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில், அனுராக்கை கடுமையாக தாக்கிய விவரங்களை லக்கன் ஒத்து கொண்டான். இதனால், லக்கனை போலீசார் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.