'விடுதலை 2' புகைப்படங்களை பதிவிட்டு வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த நடிகை மஞ்சு வாரியர்

3 hours ago 2

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு இதமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 'விடுதலை 2' படத்தில் மிகவும் முற்போக்கான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, " மகாலட்சுமி கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி வெற்றிமாறன் சார். தற்போது திரையரங்குகளில் விடுதலை 2" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Thank you #VetriMaaran Sir for Mahalakshmi ❤️ #ViduthalaiPart2 in cinemas now! pic.twitter.com/kWl7uaai6z

— Manju Warrier (@ManjuWarrier4) December 21, 2024

மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் மஞ்சு வாரியர். குறிப்பாக, நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'அசுரன்' படத்தில் நடித்த பின்பு தமிழ்நாட்டில் பிரபலமானார். பின்னர் அஜித் உடன் 'துணிவு' படத்தில் இணைந்து நடித்தார். 'வேட்டையன்' படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். ஏற்கனவே, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழில் ஆர்யா - கௌதம் கார்திக் நடிப்பில் உருவாகும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

Read Entire Article