‘விடியா ஆட்சியை வீழ்த்த விக்கிரவாண்டி வாருங்கள்’ - மதுரையில் தவெக போஸ்டர் சலசலப்பு

4 months ago 19

மதுரை: ‘விடியா ஆட்சியை வீழ்த்த விக்கிரவாண்டிக்கு வாருங்கள்’ என ஆளுங்கட்சியை சீண்டும் விதமாக மதுரையில் விஜய்யின் தவெக கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்த நிலையில், நாளை மறுதினம் (அக்.27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை விஜய் நடத்துகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், போஸ்டர்கள் ஒட்டியும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Read Entire Article