வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: மானாவாரியிலும் அதிக மகசூல் தந்து, உழவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்க செய்வதில், மக்காச்சோள பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் 10 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோள சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 1 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில், ரூ.40.27 கோடி ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
The post 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.